அம்பாறை மாவட்ட தபால் அலுவலக சேவைகளும் தொழிற் சங்க போராட்டத்தால் முடங்கின
நாடளாவிய ரீதியில் உள்ள 6 தபால் தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் (31) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளன.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் சுகயீன விடுமுறையை முன்னெடுத்துள்ளமையால், தபால் அலுவலக சேவைகள் முடங்கியுள்ளன.
இதன்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் உட்பட 7 தபால் நிலையங்கள் அவதானிக்க முடிந்தது.