தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை சென்ற மோடிக்கு கடும் எதிர்ப்பு!! -கறுப்புக் கொடி போராட்டம் நடத்திய 100 பேர் கைது-
இந்திய பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடக்கவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கோவை சென்றிருந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்ற பிரதமர் மோடி அங்கு அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகவரவேற்பு கொடுத்தனர். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழத்தினர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பொதுச் செயலாளர் கு.ராமகிருஸ்ணன் உள்பட 100ற்க்கும் மேற்பட்டோரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.