நடிகர் பரேஸ் ராவலுக்கு கொரோனா!! -தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் தொற்று-

ஆசிரியர் - Editor II
நடிகர் பரேஸ் ராவலுக்கு கொரோனா!! -தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் தொற்று-

பிரபல இந்தி நடிகர் பரேஸ் ராவலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். 

அவர் அண்மையில் மும்பையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். 

தடுப்பூசி போட்ட சில தினங்களுக்கு பின் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு