SuperTopAds

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

ஆசிரியர் - Admin
யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இங்கு கருவரையில் இருக்கும் ஸ்ரீ விநாயகருக்கு வசந்த மண்டத்தில் வீற்று இருக்கும் கஐமுகனுக்கும் அபிசேங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று பின் உள் வீதியுடாக எழுந்தருளி விநாயக பெருமான் கொடி மரத்தினை வந்தடைந்தார். பின் சுப நேரம் நண்பகல் 12 மணியளவில் மேள தாள வாத்தியம் முழங்க பிரதம குரு சிவாச்சாரியார்களில் மஹோற்சவ கொடியேற்றத்தினை எற்றிவைத்தனர்.

இவ் மஹோற்சவ கொடியேற்றத்தினை சிவ ஸ்ரீ பரமானந்த ஐயகுமாரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.இவ் மஹோற்சவம் இன்றில் இருந்து எதிர்வரும் 15.04.2018 வரை தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும்..

31.03.2018 அன்று மாலை 10 ஆவது திருவிழாவாக திருமஞ்சம்,10.04.2018 மாலை 24 ஆம் திருவிழாவாக கைலாசவாகனமும்,மறு நாள் மாலை சப்பறம் திருவிழாவும், 14.04.2018 காலை தேர் உற்சவ திருவிழாவும்; ,மறுநாள் தீர்த்த திருவிழாவுடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.

இன்றைய நாளில் கொடியேற்றத்தில் கலந்து கொள்ளுவதற்காக நாட்டின் பல பாகங்கங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருட்கடாசத்தினை பெற்றுச்சென்றனர்.