ஏமாற்றிய காதலன் மீது அசிட் வீசி கொலை செய்த காதலி!!
இந்தியாவின் - ஆக்ரா பகுதியில் காதலித்து ஏமாற்றிய காதலன் மீது அசிட் வீசி காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த தாதிய பெண் ஒருவரும் நோயியல் ஆய்வகத்தில் உதவியாளராக பணி புரியும் நபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் குறித்த தாதியப் பெண்ணின் காதலனுக்கு வீட்டில் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறுவதாகவும் அதற்காக வேறு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாகவும் காதலன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த பெண் தன்னை ஏமாற்றிய காதலனை ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து, அவரது முகத்தில் அசிட் வீசி கொலை செய்துள்ளார்.