தபால் வாக்குக்காக திருச்சியில் பணக் கவர்கள் வழங்கும் அரசியல் கட்சியினர்!! -4 பொலிஸ் பணி நீக்கம், சட்டத்தரணி மீதும் வழக்கு-
தமிழக சட்டமன்ற தேர்தலின் தபால் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் அரச ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களின் தபால் வாக்குகளை கவரும் வகையில் அரசியல் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.
இதன்படி திருச்சியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு பணம் வைத்து கவர் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தில்லை நகர் காவல் நிலையங்களில் 30 கவர்களில் தலா 2 ஆயிரம் என மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனுடன் சம்மந்தப்பட்ட 4 பொலிஸ் உத்தியோகஸ்தகர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பணம் வைக்கப்பட்ட கவர்களை கொடுத்த வழக்கறிஞர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.