SuperTopAds

கடும் காற்றினால் எழும் பாரிய அலை!! -சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலை மீட்பதில் சிக்கல்-

ஆசிரியர் - Editor II
கடும் காற்றினால் எழும் பாரிய அலை!! -சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலை மீட்பதில் சிக்கல்-

எகிப்தில் தொடர்ந்து புயல் காற்று வீசுவதால் சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரமாண்ட சரக்குக் கப்பலை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

சீனாவிலிருந்து நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்கு சென்ற எவர்கிரீன் என்ற மிகப் பெரிய சரக்குக் கப்பல் எகிப்தின் சூயஸ் கால்வாயைக் கடந்து சென்ற போது, புயல் காற்றில் கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டது.

அந்தக் கப்பலைத் தொடர்ந்து வந்த 300 ற்க்கும் மேற்பட்ட கப்பல்கள் பல்வேறு இடங்களில் காத்திருக்கின்றன. 400 மீட்டர் நீளம் கொண்ட எவர்கிரீன் கப்பலை மீட்கும் முயற்சிகள் வேகமாக நடந்து வரும் வேளையில் கடுமையான காற்றும், அதன் காரணமாக எழும் அலைகளும் நிலைமையை சிக்கலாக்குவதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.