புதிய புற்களை தேடி உண்டு வரும் யானை கூட்டம்
யானை கூட்டம் ஒன்று புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் மதியம் திடிரென சம்மாந்துறை ஊடாக காரைதீவு மாவடிப்பள்ளி நிந்தவூர் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு வருகை தந்துள்ளன.
இதன் போது குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன் கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது.
குறித்த யானைக்கூட்டத்தை பார்வையிட மாவடிப்பள்ளி பாலம், காரைதீவு ,நிந்தவூர் ,சம்மாந்துறை ,பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து நின்று யானைக்கூட்டத்தை அவதானிப்பதை காணமுடிகிறது.
மேலும் இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.