யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளிமாவட்ட பக்தர்களுக்கு முற்றாக தடை..! 100 பேருடன் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளிமாவட்ட பக்தர்களுக்கு முற்றாக தடை..! 100 பேருடன் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா..

கிளிநொச்சி - புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்கு வெளிமாவட்டத்தவர்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 100 பேருடன் பொங்கல் விழாவை நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கண்டாவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கொரோனா-19 தொற்று அதகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில், எமது பிரதேசத்தில் உள்ள பரசித்தி பெற்ற புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் முடிந்துள்ளது. 

அரசாங்க அதிபரின் பணிப்பிற்கு அமைவாக நாளைய தினம் குறித்த பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அவசர அவசரமான தீர்மானங்கள் சிலவற்றை எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கமைவாக ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகம் இடையில் கலந்துரையாடி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பொங்கல் நிகழ்விற்கு வெளிமாவட்டங்களிலிருந்து எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் 100 பேருக்குக் குறைவானவர்களே பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோயில் நிர்வாகத்தினர் பொறுப்புடன் செயற்படுவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அறிவுறுத்தலிற்கு அமைவாக பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு