இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்!! -அரசியலில் இணைந்த சகிலா பேச்சு-
தற்போது அரசியலில் நுழைந்துள்ளேன், இனி போக போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள் என்று கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த நடிகை சகிலா தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை சகிலாவுக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றார்.