வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்..! படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பும் முன் மீண்டும் ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்..

வீடு புகுந்து வாள்வெட்டுகுழு நடத்திய தாக்குதலில் குடும்பஸ்த்தர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மீளவும் அதே வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
முல்லைத்தீவு - மல்லாவி புகழேந்திநகர் பகுதிகளில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 13ம் திகதி இரவு வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் வீட்டிலிருந்து இளம் குடும்பஸ்த்தர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருந்தது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்த்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் நேற்றய தினம் இரவும் அதே வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் கதவு, யன்னல் போன்றவற்றை உடைத்து சேதமாக்கியுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.