யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிகள் தொடர்ந்தும் சுமுகமாக இடம்பெறும்..! தேவையற்ற நடமாட்டம், பார்வையாளர் வருகை போன்றவற்றை தவிருங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிகள் தொடர்ந்தும் சுமுகமாக இடம்பெறும்..! தேவையற்ற நடமாட்டம், பார்வையாளர் வருகை போன்றவற்றை தவிருங்கள்..

யாழ்.போதனா வைத்தியசாலையின் சேவைகளை இடர்பாடுகள் இல்லாமல் தொடர்வதற்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும். என யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.யமுனானந்தா கூறியுள்ளார். 

போதனா வைத்தியசாலை மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 13 பேருக்கும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பொதுமக்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் வைத்தியசாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று இரவு ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. 

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மிகவும் சுமுகமான முறையில் நடைபெறும்.

மேலும் கிளினிக் நோயாளர்களுக்கும் மருந்து மற்றும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்க்க வருவோர் அதனை தவிர்க்கவேண்டும் எனவும், வைத்தியசாலைக்குள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்க்கவேண்டும்.

எனவும் பிரதி பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு