ராம்நாத் கோவிந்துக்கு உடல்நலக்குறைவு!! -இராணுவ வைத்தியசாலையில் அனுமதி-
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இது வழக்கமான பரிசோதனைகள்தான் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.