சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடம்!! -நித்யா மேனன் நடிக்க சம்மதம் தெரிவிப்பு-

ஆசிரியர் - Editor II
சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடம்!! -நித்யா மேனன் நடிக்க சம்மதம் தெரிவிப்பு-

மலையாளத்தில் கடந்த ஆண்டு அய்யப்பனும் கோசியும் என்று படம் வெளியாகி வெற்றிபெற்றது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. 

தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்துள்ளார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். 

இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க உள்ளார். இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

அதேபோல் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அவர் நடிக்க மறுத்ததால் தற்போது நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு