SuperTopAds

மும்மை கொரோனா வைத்தியசாலையில் திடீர் தீ!! -உடல் கருகி 10 நோயாளர்கள் பலி-

ஆசிரியர் - Editor II
மும்மை கொரோனா வைத்தியசாலையில் திடீர் தீ!! -உடல் கருகி 10 நோயாளர்கள் பலி-

மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

அங்குள்ள வணிக வளாகம் ஒன்றின் 3 ஆம் மாடியில் இந்த தனியார் கொரோனா சிகிச்சை மையம் அமைந்திருந்தது. அங்கு சுமார் 76 கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெற்று வந்தனர். இந்நிலையில் ஏனைய கொரோனா நோயாளிகள் அனைவரும் மீட்கப்பட்டு வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த 22 தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயைக் கட்டுப்படுத்தின. இன்று வெள்ளிக்கிழமை காலை தீ முற்றாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.