பெருமெடுப்பில் கைது செய்யப்பட்ட 54 இந்திய மீனவர்களில் 40 பேர் விடுதலை, படகுகளும் விடுவிப்பு..! ஜெனீவா “டீல்” காரணமா? கைது நாடகம் எதற்கு? வடக்கு மீனவர்கள் கேள்வி.

ஆசிரியர் - Editor I
பெருமெடுப்பில் கைது செய்யப்பட்ட 54 இந்திய மீனவர்களில் 40 பேர் விடுதலை, படகுகளும் விடுவிப்பு..! ஜெனீவா “டீல்” காரணமா? கைது நாடகம் எதற்கு? வடக்கு மீனவர்கள் கேள்வி.

இலங்கை கடல் எல்லைக்குள் அடாத்தாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 54 இந்திய மீனவர்களில் 40 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், 3 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி - மன்னார் இடையிலான கடற்பரப்புக்களில் அடாத்தாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 54 இந்திய மீனவர்கள் நேற்று மட்டும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தவிர்ந்த 40 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருப்பதுடன், படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. 

பெருமெடுப்பில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றபோதும் இறுதியில் கைது செய்யப்பட்ட பெரும்பலானா மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த கைது நாடகம் எதற்காக? என கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மீனவர்கள், 

இந்தியா - இலங்கை இடையிலான டீல் காரணமாகவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்படும் வடக்கு மீனவர்கள் குறித்து கவனத்தில் எடுக்கவில்லை. எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு