யாழ்.மாநகரில் இராணுவம் குவிப்பு..! நகரின் ஒரு பகுதி பூரணமாக முடக்கப்பட்டது, நகரில் நடமாடியோர் வெளியேற்றப்பட்டனர், தொற்று நீக்கல் நடவடிக்கை ஆரம்பம்..
யாழ்.மாநகரில் 77 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாநகரை முடக்கும் தீர்மானம் மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணியினால் எடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக நேற்று மாலை அவசர அவசரமாக கூடிய மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணி யாழ்.மாநகரின் ஒரு பகுதியை முடக்குவதற்கு தீர்மானித்ததுடன், வீதிகளையும் முடக்க உத்தரவிட்டிருந்தது.
மேலும் பேருந்து சேவைகளை கோட்டை சுற்றாடலில் இருந்து நடத்துவதற்கும் தீர்மானித்திருந்தது. எனினும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக நகரில் மக்கள் வழக்கம்போல் நடமாடியதுடன்,
பேருந்து சேவைகளும் இடம்பெற்ற நிலையில் சற்று முன்னர் சுகாதார பிரிவினர், இராணுவம், பொலிஸார், மற்றும் அதிகாரிகள் கடமையை பொறுப்பேற்றுள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணி தீர்மானித்தமைக்கு அமைவாகபேருந்து சேவைகள் நகரிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதுடன், நகருக்கும் நடமாடியவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது நகர் முடக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதுடன், நகருக்குள் தொற்று நீக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
படங்கள்- நன்றி நிருஜன்