யாழ்.மாநகரம் வழமைபோல் இயங்குகிறதா? மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானம் என்னவானது? தயாராகிக் கொண்டிருக்கும் பொலிஸார், இராணுவம்..
யாழ்.மாநகரில் நேற்றய தினம் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவசர.. அவசரமாக கூடிய மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி யாழ்.நகரின் ஒரு பகுதியை முடக்கும் தீர்மானத்தினை எடுத்திருந்தது.
மேலும் யாழ்.மாநகருக்குள் சில வீதிகளையும் முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததுடன், பேருந்து சேவைகளை பண்ணை பகுதியிலிருந்தும், கோட்டை சுற்றாடலில் இருந்தும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதையும், மக்கள் வழக்கம்போல் நடமாடுவதையும் அவதானிக்ககூடியதாகவுள்ளது.
இந்நிலையில் யாழ்.பிரதான தபாலகத்திற்கு முன்பாக பொலிஸார் மற்றும் இராணுவம் தயாராகி வருவதாகவும் அவர்கள் இன்னும் கடமையை பொறுப்பேற்கவில்லை. எனவும் தொிவிக்கப்படுவதுடன்,
சற்று நேரத்தில் திட்டமிட்டபடி நகரத்தின் ஒரு பகுதி முடக்கப்படும் எனவும் தொியவருகின்றது.
படங்கள்- நன்றி நிருஜன்