SuperTopAds

யாழ்.மாநகரின் மத்திய பகுதி முடக்கப்படுகிறது..! நகருக்குள் நுழையும் பிரதான வீதிகள் முடக்கம், அவசரமாக கூடிய மாவட்ட கொவிட் 19 தடுப்பு செயலணி அதிரடி..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகரில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் நகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டிரக்கின்றது. 

நகரின் மத்தியில் இயங்கிவந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக கோட்டை சுற்றாடலில் நடாத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும். 

கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும். யாழ்.மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.

இதேபோல் யாழ்.மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன. 

வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும். உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

அத்துடன், மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.