SuperTopAds

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கு பெறும் பணி ஆரம்பம்!!

ஆசிரியர் - Editor II
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கு பெறும் பணி ஆரம்பம்!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்குபதிகுள் சென்னையில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம்முறைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழலில், அவர்களின் வீடுகளிலேயே இருந்தவாறு வாக்களிக்கும் முறையை

தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 80 வயதுக்கு மேற்பட்ட 6 ஆயிரத்து 992 பேரும், மாற்றுத்திறனாளிகள் 308 பேரும் என 7 ஆயிரத்து 300 பேர் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டனர்.

இருப்பினும் 4 ஆயிரத்து 700 பேரின் படிவங்கள் நிராகரிக்கப்பட்டு, 7 ஆயிரத்து 300 பேரின் படிவங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரின் வீடுகளிலும் தபால் வாக்குகள் பெறும் பணிகள் நேற்று ஆரம்பமாகியது. இந்த பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.

இதற்காக 70 வாக்குப்பதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் வாக்குப்பதிவு அதிகாரிகள், நுண் பார்வையாளர், பொலிஸ், வீடியோ பதிவு செய்பவர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பார்கள். ஒரு குழு தினசரி 15 வாக்குகளை அந்தந்த வீடுகளில் சென்று பதிவு செய்யும்.

தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளரின் முகவரிக்கு வருகை தரும் திகதி, நேரம், அவர்களது கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். தொலைபேசி இல்லாத வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

தினமும் பெறப்படும் தபால் வாக்குகள் விவரம், இணைய வழியாக தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.