யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கொவிட் -19 சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்..!
கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.மாநகரசபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.
திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் அதே திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து மாநகர முதல்வர் தானாக முன்வந்து பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தியிருந்தார்.
இதனடிப்படையில் நேற்று பிற்பகல் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று பிற்பகல் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துக் செல்லப்பட்டிருக்கின்றார்.