SuperTopAds

இந்தியாவில் இருமுறை உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு!! -இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் நாட்டை உருவான வைரஸ்-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் இருமுறை உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு!! -இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் நாட்டை உருவான வைரஸ்-

இந்தியாவில் இருமுறை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 

இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்ய 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சு உருவாக்கியது. 

அந்த குழு 10 ஆயிரத்து 787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்தது. அதில், இதுவரை 771 உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தை சேர்ந்த உருமாறிய கொரோனாவை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும், ஒரு மாதிரி, பிரேசில் உருமாறிய கொரோனாவையும் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.