அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஆசிரியர் - Editor II
அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி!!

பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரின் செய்தித் தெடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

அமீர்கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

அவர் தற்போது நலமுடன் உள்ளார். அண்மையில் அவரை சந்தித்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு