யாழ்.மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் கொரோனா தொற்று அதிகரிப்பு..! யாழ்.நகரில் சந்தை வியாபாரிகள் 9 பேர் உட்பட 21 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் கொரோனா தொற்று அதிகரிப்பு..! யாழ்.நகரில் சந்தை வியாபாரிகள் 9 பேர் உட்பட 21 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்

யாழ்.மாவட்டத்தில் 21 பேர் உட்பட வடமாகாணத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்று 604 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்.நகரில் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 9 பேருக்கு தொற்று உள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் பனை உற்பத்தி பொருள்கள் வியாபாரிகளும் 

மூவர் மரக்கறி வியாபாரிகளும் அடங்குகின்றனர். கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் காரைநகர் பேருந்துச் சாலை பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள்.

மன்னாரில் நகரைச் சேர்ந்த மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு