SuperTopAds

கரையோர பிரதேச கடல்பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளினால் நிரம்பி காணப்படுகின்றன

ஆசிரியர் - Editor III
கரையோர பிரதேச கடல்பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளினால் நிரம்பி காணப்படுகின்றன

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச கடல்பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளினால் நிரம்பி காணப்படுகின்றன.

குறிப்பாக பெரிய நீலாவணை மருதமுனை கல்முனை காரைதீவு நிந்தவூர் பகுதி கடற்பகுதிகள் யாவும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி எவரும் கவனிப்பாரற்று கிடக்கின்றன.

அப்பகுதி மக்கள் பொழுது போக்கு இடமாக பாவிக்கின்ற கடற்பகுதிகள் மற்றும் மீனவர்களின் வாடிகள் ஆகியவற்றில் குறித்த பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன.

இக்கழிவு பொருட்களில் பிளாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன் பைகள் சோடாப்போத்தல்கள் மருத்துவ கழிவுகள் பியர் டின்கள் என்பன உள்ளடங்கின்றன.  மேலும் கடற்கரையை அண்டிய  கால்வாயில் கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசும் இடமாகவும் மற்றும் நுளம்பு பெருகும் இடமாகவும் மாறிவருகின்றது.

 

கடற்கரையை  அண்டிய மக்கள் கூடும் இடங்களை அண்மித்த இடங்களில்  இத்தகைய துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக  இடையிடையே சிரமதானம் எனும் பெயரில் கண்துடைப்பிற்காக இப்பகுதிகள்  துப்பரவும் செய்யப்படுகிறதுடன் இது தொடர்பில் எவ்வித  அவதானிப்புக்களும் இன்றி உரிய தரப்பினர்  செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேற்படி கடற்கரை பகுதிகளுக்கு  வெளிமாவட்ட மக்கள் மட்டுமன்றி அப்பகுதியை  சேர்ந்தவர்களும் வந்து செல்லும் இடமாகவுள்ளமையினால் குறித்த பகுதிகளை துப்புரவு செய்யவும் அதனை நிரந்தரப் புனரமைப்பு செய்யவேண்டும் எனவும் மக்கள் கேரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.