SuperTopAds

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு..!

ஆசிரியர் - Editor I
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு..!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாமிய பயங்கரவாதிகள் மற்றும் பயங்ரவாதிகளுக்கு துணைபோன சந்தேகநபர்களுக்கு புனர்வாழ்வு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

எதிர்வரும் நாட்களில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புனர்வாழ்வளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தேசிய புலனாய்வு சேவை ஆகியவற்றின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார். எத்தனை பேர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் 

என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.