SuperTopAds

முஸ்லிம் மக்கள் நாட்டை பிரிப்பதற்கோ, சர்வதேச நீதியை கோருவதற்கோ விரும்பவில்லை..! உலமா கட்சியின் தலைவர் கருத்து..

ஆசிரியர் - Editor III
முஸ்லிம் மக்கள் நாட்டை பிரிப்பதற்கோ, சர்வதேச நீதியை கோருவதற்கோ விரும்பவில்லை..! உலமா கட்சியின் தலைவர் கருத்து..

இலங்கையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இங்குள்ள வளங்களே போதுமானது. என கூறியிருக்கும் உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜித், முஸ்லிம் மக்கள் நாடு இரண்டாக பிரிவதையோ, சர்வதேச தலையீட்டை கோருவதற்கோ விரும்பவில்லை. எனவும் கூறியிருக்கின்றார். 

சமகால அரசியல் நிலைமைகள்  தொடர்பில்  எழுந்துள்ள  சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம்  கல்முனையில் அமைந்துள்ள உலமா  கட்சி அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

எமது அரசாங்கம்  இனவாதம் இல்லாத ஒரு அரசாங்கம் .நிச்சயமாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணி உரிமம் வழங்காது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் மட்டும் வழங்கியது என்பது ஒரு இனவாத செயல் ஆகும்.

இதை வன்மையாக கண்டிக்கின்றோம் இதில் அரசாங்கம் தலையிட்டு நிச்சயமாக நீதியை பெற்றுக்கொடுக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். எமது நாட்டு  சூழலை பார்க்கின்ற பொழுது  ஒரு நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். பொதுஜன பெரமுனவை  ஸ்தாபித்து 

அதன் வெற்றிக்கு  பின்னால் இருக்கின்ற கிங்மேக்கர் ஆன பசில் ராஜபக்ஷ அவர்கள் நேரடியாக ஆட்சி அதிகாரங்களுக்கு  வர வேண்டும் என  நாங்கள் உறுதியாக  இருக்கின்றோம். அதே போன்று நாங்கள்  மட்டுமல்ல   அதாவது ராஜபக்ச குடும்பத்தை எதிர்த்து நிற்கின்ற கட்சிகள் கூட 

பசில் ராஜபக்ஷ வரவேண்டும் என  அவர்கள் உள்ளார்ந்தமாக  இருப்பதை நாங்கள் கண்டுள்ளோம். ஏனெனில்  அரசாங்கத்தின்   கடிவாளம் இன்றைய சூழ்நிலையில் பசில் ராஜபக்ச கையில் இருப்பதாக தான் எங்களுக்கு தெரிகின்றது.

அந்த வகையில் அவர்  அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு செல்லக் கூடியவர் என்பதனை    வரலாற்றில் நாம் கண்டிக்கின்றோம்.கடந்த ஆட்சிக் காலத்திலே அவர் ஒரு பிரதானியாக இருக்கின்ற பொழுது நாட்டுடைய அபிவிருத்திகளை கொண்டு சென்ற பொழுது 

அவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தாலும்  கூட  அவர் வடக்கு கிழக்கு ஒதுக்கிவிட்டு ஏனைய பகுதியை  பார்க்கவில்லை. மாறாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அவர் தாராளமாக உதவி செய்ததை நாங்கள் சொல்லவில்லை அந்த அரசாங்கத்தில் இருந்த  

முஸ்லிம் கட்சி தலைவர்களே பகிரங்கமாக சொல்லியுள்ளார்கள்.அப்படிப்பட்ட பசில் ராஜபக்ச அவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் அந்த அதிகாரத்தின் ஊடாக நாட்டை மிகச் சிறப்பான வழியில் அவர்  கொண்டு செல்வார் என நாங்கள் நம்புகின்றோம்.

அதாவது பசில்  ராஜபக்ச வருவது என்பது சிலருடைய கற்பனையில்  இருப்பது போன்று  ராஜபக்ஷ குடும்பத்துக்கு உள்ளே இருக்கின்ற போட்டியாக கருத  முடியாது. ஏனெனில் நாங்கள்  ராஜபக்ச குடும்பத்தோடு அரசியல் செய்து கொண்டு வருகின்றோம். 

அண்மையில் ஜனாதிபதி கோட்டபாய  ராஜபக்ச கூறியது  போன்று எங்கள் குடும்பம் என்பது யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாத  குடும்பம் என்று சொன்னார்.அது உண்மையான கருத்து ஆகும். நிச்சயமாக சகோதரர்கள் ஒன்றுபட்டால் நாட்டில் ஒரு நேரான 

சீரிய வழிக்கு கொண்டு செல்லலாம் என்று நாங்கள் கருதுகின்றோம். இதனால் தான்  பசில் ராஜபக்ஷ அவர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டுமென்று நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம். எங்கள் நாட்டில்  இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எங்களது நாட்டிலேயே இருக்கின்ற வளங்கள்  போதுமானது 

என்பதுதான் எங்கள் கருத்து .நாங்கள் சர்வதேச தலையீட்டை விரும்பவில்லை. ஏனென்றால் சர்வதேசம் தலையிட்ட நாடுகளிலே  பிரச்சினைகள் அதிகரித்து வந்தள்ளதை நாம்   காண்கின்றோம்.உதாரணமாக சூடானில் ஏற்பட்ட பிரச்சினைகளை அந்த நாட்டில் இருக்கின்ற மக்கள் தீர்த்திருக்கலாம். 

சர்வதேசம் தலையீட்டதன்  காரணமாக அந்நாடு இரண்டாக பிளவுபட்டதை காண முடியும். ஆகவே எங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களாகிய  நாங்கள்  இந்த நாடு இரண்டாக பிளவுபடுவதை  ஒருபோதும்  அனுமதிக்க மாட்டோம். அந்த வகையில்சர்வதேச நாடுகள்   நாடுகளை  இரண்டாகப் பிரிக்கின்ற 

ஒரு சூழ்ச்சிகளை தான் செய்வார்கள்.  எங்கள் நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்கள் முத்தரப்பாக  அரசாங்கமும் தமிழ் மக்களும் முஸ்லிம் தரப்புகளும்  ஒன்றிணைந்து  பேசி பிரச்சினைகளை தீர்ப்பது தான் நாட்டுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது இது எங்களுடைய  கட்சியின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது.

 மேலும் மாகாண சபைத் தேர்தலை நடாத்த   அரசாங்கம் உறுதி தெரிவித்திருக்கின்றது .ஆனால் எப்போது நடக்கும் என்பது  எமக்கு தெரியாவிட்டாலும் கூட எங்களுக்கு ஒரு உண்மை தெரியும் ராஜபக்ச ஆட்சியாளர்கள் தேர்தல்களை கண்டு பயந்ததாக  வரலாற்றில் நாம் காண முடியாது. 

குறிப்பாக வட மாகாணத்தில் தேர்தல் வைத்தால் நிச்சயமாக அரச கட்சி தோல்வியை தழுவும் என  தெரிந்தும் கூட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு தேர்தல்களை வைத்து   மக்களுடைய  ஜனநாயக உரிமையை பெற்று  கொடுத்தார் என்பதை    மறந்து விடக்கூடாது.

 கடந்த நல்லாட்சி அரசாங்கமானது  மூன்று வருடங்களாக  மாகாண சபை தேர்தலை  நடத்தவே இல்லை அந்தளவுக்கு அச்சப்பட்டார்கள்.   ஆகவே மாகாணசபைத் தேர்தல் நடக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் .அது மாத்திரமல்ல  முஸ்லிம் சமூகத்தை ஒரு கறிவேப்பிலையாக 

தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள்.தேர்தல் ஒன்று வருகின்ற  பொழுது முஸ்லீம்களை கழட்டி விடுவார்கள்  என்றார்.