வாத்தி கம்மிங் பாடல்!! -புதிய சாதனை படைத்தது-

ஆசிரியர் - Editor II
வாத்தி கம்மிங் பாடல்!! -புதிய சாதனை படைத்தது-

இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல், யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளதை அடுத்து அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இதில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. 

இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ, யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஏற்கனவே வாத்தி கம்மிங் பாடலின் லிரிக்கல் வீடியோவும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்த ஒரு பாடலின் லிரிக்கல் வீடியோவும், வீடியோ பாடலும் தனித்தனியே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததில்லை. தற்போது வாத்தி கம்மிங் பாடல் அந்த உச்சத்தை தொட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு