SuperTopAds

மியான்மர் எல்லைக்கு சீல்!! -கண்காணிப்பையும் பலப்படுத்திய இந்தியா-

ஆசிரியர் - Editor II
மியான்மர் எல்லைக்கு சீல்!! -கண்காணிப்பையும் பலப்படுத்திய இந்தியா-

இந்தியாவின் மியான்மர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளின் அனைத்து எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதோடு அகதிகள் நுழைவதை தடுக்கும் நோக்கில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மியான்மரில் இராணுவ ஆட்சி நடந்து வருகின்ற நிலையில், அதனை எதிர்த்து மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் அந்நாட்டில் உள்ள பல பொது மக்கள் மற்றும் பொலிஸார் குடும்பங்களாக வெளியேறி இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ளனர். 

இந்நிலையில் மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா நேற்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜின் மார் ஆங்குடன் காணொளி மூலம் அங்கு நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து முதலமைச்சர் சோரம்தங்கா தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்த கடினமான காலங்களில் மியான்மருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மியான்மர் அகதிகளுக்கு நாட்டில் உணவு மற்றும் தங்குமிடம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.