உருத்திரபுரம் சிவன் கோவில் வளாகத்தில் அகழ்வு பணிகள்..! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மக்களுடன் கூட்டமைப்பு ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
உருத்திரபுரம் சிவன் கோவில் வளாகத்தில் அகழ்வு பணிகள்..! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மக்களுடன் கூட்டமைப்பு ஆராய்வு..

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் கோவில் வளாகத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளமை தொடர்பாக பொதுமக்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் கலந்துரையாடல் நடாத்தியிருக்கின்றனர். 

தொல்லியல் திணைக்களத்தின் இந்த அகழ்வு முயற்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினரும் தமிழ் அரசியல் தரப்பினரும் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா, 

நாம் எல்லா விடயங்களிலும் போராட வேண்டிய சூழலில் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். அத்துடன், அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள், இராணுவத் தரப்புடன் பௌத்த பிக்குமார் ஆகியோர் உருத்திரபுரீஸ்வரர் கோயில் பகுதியைப் பார்வையிட்டுள்ள நிலையில், 

எதிர்வரும் 23ஆம் திகதி அகழ்வு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவதாக அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், இந்த அரசாங்கத்தின் ஆட்சி தமிழர் நிலங்கள், பாரம்பரியங்கள் இருக்கின்ற கோயில்களில் பௌத்த சமயத்தை நிலைநாட்டுவதற்காக 

பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட தொல்லியல் தினைக்களம் என்னும் குழுவை நியமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில், இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நாம் பலமான ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த அடையாளங்களை உருவாக்கி வரலாற்று ஆவணங்களைம் தயாரிப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, இதற்கு நாம் இடமளிக்காமல் எமது மண்ணைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கைகள் 

மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு