இராணுவமே மகனை கொண்டு சென்றது..! 2010ம் ஆண்டு தாங்கள் காட்டிய 48 பேருடைய பட்டியலில் என் மகனுடைய பெயரும் உள்ளது.. அமைச்சர் டக்ளஸிடம் தந்தை ஒருவர் உருக்கம்..

ஆசிரியர் - Editor I
இராணுவமே மகனை கொண்டு சென்றது..! 2010ம் ஆண்டு தாங்கள் காட்டிய 48 பேருடைய பட்டியலில் என் மகனுடைய பெயரும் உள்ளது.. அமைச்சர் டக்ளஸிடம் தந்தை ஒருவர் உருக்கம்..

இராணுவம் கைது செய்து கொண்டு சென்ற மகன் உயிருடன் உள்ளான். அவனை விடுவித்து தாருங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமல் ஆக்கப்பட்டவரின் பெற்றோார் உருக்கமான கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர். 

நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்த காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது மகன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் யாழ்ப்பாணத்தில் வைத்திருந்தமை தொடர்பில் பின்னர் சிறைச்சாலையில் வைத்திருந்தமை தொடர்பில் தங்களிடம் ஆதாரத்துடன் தெரிவித்தேன். எனது மகனை எப்படியாவது விடுவித்துத்தர வேண்டும்.

என பல தடவைகளில் தங்களிடம் வலியுறுத்தினேன். 2010ஆம் ஆண்டு தங்களிடம் இருந்த 48 போருடைய பெயர் பட்டியலில் எனது மகனின் பெயர் இருப்பதை தங்களுக்கு உறுதி செய்தேன். எனது மகன் கைது செய்யப்பட்டபோது தாயின் வயிற்றில் கருவாக இருந்த ஆண்பிள்ளைக்கு தற்போது 13 வயது ஆகிறது.

நீங்கள் அழைத்தது காணாமல் போனவர்கள் தொடர்பில் பேசுவதற்கு ஆனால் என் மகன் காணாமல் போகவில்லை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொண்டு சென்றார்கள். ஆகையால் காணாமல் போன பட்டியலில் இணைத்து விட முடியாது.

எனக்கு நிதி வேண்டாம் எனது மகனை விடுவித்த தந்தால்போதும் என கோரிக்கை விடுத்தார். இதன்போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிக்கப்பட்டவர்களின் பற்றி எனக்கு நன்கு புரியும் எனது தம்பியையும் நான் பறி கொடுத்தவன்.

பாதிக்கப்பட்ட மக்களை நான் அழைத்தது பதாதைகளுக்காக அல்ல ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளியாக இருந்தவன் நான் தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியவன் பாதிக்கப்பட்டவர்களின் வலியை என்னால் உணரக் கூடிய நிலையில் 

அவர்களுக்கு உதவ வேண்டும் என ஜனாதிபதியும் விருப்பமாக உள்ள நிலையில் நானும் அதை கையில் எடுத்தேன்.ஆகவே கடந்த கால கசப்பான அனுபவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாத வண்ணம் மக்களை பாதுகாப்பான வழியில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு 

நான் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கூட்டத்திற்கு வடமாகாணத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு