SuperTopAds

ஒருதலை காதல் மோகம்!! -கைக்குழந்தை வெட்டிக்கொலை செய்த தம போதகர்-

ஆசிரியர் - Editor II
ஒருதலை காதல் மோகம்!! -கைக்குழந்தை வெட்டிக்கொலை செய்த தம போதகர்-

இந்தியா நெல்லை மாவட்டத்தில் 8 மாதக்குழந்தையை கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை அடுத்த மகிழடியை சேர்ந்தவர் மத போதகராகனா ரசூல்ராஜ் (வயது 58) என்பவரே மேற்படிச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

குறித்த நபருக்கு எப்சி பாய் (வயது 52) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இதில் முதலாவது மகள், அவரது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இவர்களது 8 மாத கைக் குழந்தையான குயின்சி தாத்தா ரசூல்ராஜின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். ரசூல்ராஜின் 4 ஆவது மகள் கோவையில் உள்ள வைத்தியசாலையில் தாதியராக உள்ளார். 

இவரை பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவா என்ற சிவசங்கரன் (வயது 25) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது பெற்றோரிடம் சிவா பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ரசூல்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிவா இன்று சனிக்கிழமை அதிகாலை அரிவாள், சுத்தியல், பெட்ரோல் கேனுடன் ரசூல்ராஜின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு எப்சிபாய் மற்றும் அவர்களது பேத்தி குயின்சி ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த போது, சிவா அரிவாளால் 2 பேரையும் சரமாரி வெட்டி உள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ரசூல்ராஜ் வீட்டிற்கு ஓடி வந்தார்.

அப்போது அவரையும் அரிவாளால் சிவா சரமாரி வெட்டினார். பின்னர் 3 பேரையும் வீட்டிற்குள் அடைத்து வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். இருப்பினும் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அயலில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதனால் சிவா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து திருக்குறுங்குடி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த 3 பேரையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கைக்குழந்தை குயின்சி பரிதாபமாக இறந்தாள். ரசூல்ராஜ், எப்சிபாய் ஆகியோருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.