SuperTopAds

யாழ்.நகரில் 15 வயது சிறுமி, மானிப்பாயில் தாய் மற்றும் மகள், மருத்துவபீட மாணவர்கள் உட்பட யாழ்.மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று, விபரம் வெளியானது...

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் 15 வயது சிறுமி, மானிப்பாயில் தாய் மற்றும் மகள், மருத்துவபீட மாணவர்கள் உட்பட யாழ்.மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று, விபரம் வெளியானது...

யாழ்.மாவட்டத்தில் 6 பேர் உட்பட வடக்கில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் இருவரும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்களாவர். மேலும் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 

ஒருவருக்கு கெரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர் 15 வயதான சிறுமி எனவும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர். எனவும் கூறப்படுகின்றது. மேலும் மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 

60 வயதான தாய் மற்றும் மகள் தொற்று அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் யாழ்.மாநகர நவீன சந்தை தொகுதியில் உள்ள கடை ஒன்றில் 

பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வவுனியா மாவட்டத்தில் தொற்று அறிகுறிகளுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி மரக்கறி சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்குமாக வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.