SuperTopAds

மியான்மர் தெருக்களில் மண்டியிட நான் தயார்: தயவு செய்து வன்முறைகளை நிறுத்துங்கள்!! -போப்பாண்டவர் பிரான்சிஸ் மன்றாட்டம்-

ஆசிரியர் - Editor II
மியான்மர் தெருக்களில் மண்டியிட நான் தயார்: தயவு செய்து வன்முறைகளை நிறுத்துங்கள்!! -போப்பாண்டவர் பிரான்சிஸ் மன்றாட்டம்-

மியான்மரில் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு உலக கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மியான்மரின் தெருக்களில் நானும் மண்டியிட்டுக் கோரத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வத்திக்கான் நூலகத்திலிருந்து இணைய வழியில் இடம்பெற்ற வாராந்த சந்திப்பின்போது போப்பாண்டவர் மேற்படிக் கோரிக்கையை விடுத:துள்ளார்.

மியான்மரின் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு இடம்பெறும் மக்கள் போராட்டங்களின்போது இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மியான்மரில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையைப் மிகுந்த சோகத்துடன் உணர்கிறேன். அங்கு பலர், பெரும்பாலும் இளையவர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் தங்கள் உயிர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என அவர் கூறினார்.

நானும் மியான்மரின் தெருக்களில் மண்டியிட்டு வன்முறையை நிறுத்துமாறு கோருகிறேன். ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

கடந்த வாரம் மியான்மர் நகரமான மைட்கினாவில் இராணுவத்தினர் முன்னிலையில் கன்னியாஸ்திரி ஒருவர் மண்டியிட்டு மக்களைச் சுட வேண்டாம் என மன்றாடிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இவற்றைக் கருத்தில் கொண்டே நானும் மியான்மர் தெருக்களில் மண்டியிடத் தயார் என போப்பாண்டவர் தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.