ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு மானியம் வழங்க முயற்சி, விவசாய அமைச்சர் முன் அம்பலமானதால் திணறிய அதிகாரிகள், விசாரணைக்கு ஆளுநர் பணிப்பு...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு சின்ன வெங்காய அழிவுக்கான மானியம் வழங்க முயற்சிக்கப்பட்டமை குறித்து விரிவான விசாரணை நடாத்தி அறிக்கை தருமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்துள்ளார்.
கடந்த வருடம் யாழ்.மாவட்டத்தில் சின்ன வெங்காய செய்கையாளர்களுக்கான இழப்பீடு மானியத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மானியம் வழங்கப் பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன்
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றய தினம் விவசாய அமைச்சர் கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். இந்நிலையில் குறித்த விடயம் தொட்பாக
வடக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளரை தெளிவுபடுத்துமாறு அமைச்சர் கூறியபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தனித்தனியான காணிகளை வைத்திருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க
குறித்த பகுதிக்கு பொறுப்பான விவசாய போதனா ஆசிரியருக்கு தெரிவை அனுப்பியதாக தெரிவித்தார். எனினும் அவர்கள்தொடரில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் மானியத்தை இடை நிறுத்தியதாக விளக்கமளித்தார்.
இதன்போது குறுக்கிட்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மானியத்தை யாருடைய அறிவுறுத்தலின் பேரில் நிறுத்தியதாக கேள்வி எழுப்பியதுடன் குறித்த விடயம் தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.