SuperTopAds

பளை - கராந்தாய் மக்களின் காணி பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு..! நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு அமைச்சர் உத்தரவாதம்..

ஆசிரியர் - Editor I
பளை - கராந்தாய் மக்களின் காணி பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு..! நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு அமைச்சர் உத்தரவாதம்..

கிளிநொச்சி - பளை கராந்தாய் மக்களுக்கான காணிகள் மிக விரைவில் வழங்கப்படும். என பெருந்தோட்ட அவிருத்தி அமைச்சர் ரமேஸ் பத்திரண கூறியுள்ளார். 

இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுபீட்சத்திற்கான நோக்கு செயலணியின் கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

குறித்த குட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பளை - கராந்தாய் மக்களின் காணிகள் தொடர்பாக எழுப்பபட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேற்படி கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறுகையில், அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் நானும் ஒன்றாக பாராளுமன்றம் சென்றவர்கள். 

பாராளுமன்றத்திலும் அருகருகே அமர்ந்திருந்தவர்கள். அந்த வகையில் எமது பிரச்சினையை அவர் தீர்த்து வைப்பார் என நம்புகிறேன் என தெரிவித்து பிரச்சினையை கூறினார்.

கரந்தாய் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுமார் 52 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் அவர்களை வெளியேற வேண்டுமென தென்னை அபிவிருத்திச் சபை இரவோடிரவாக 

அவர்களின் வாழ்விடங்களை பிடுங்கி எறிந்து அவர்களை நடுவீதியில் விரட்டியது. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் வழக்கு தொடர்ந்ததன் பயனாக 

மன்று மக்களை குறித்த காணியில் மீண்டும் செல்வதற்கு அனுமதி அளித்தது. இந்நிலையில் குறித்த காணியை மக்களுக்கு வழங்கக்கூடாது என தென்னை அபிவிருத்தி சபை 

திரைமறைவில் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தாங்கள் அமைச்சராக இருக்கின்ற நிலையில் அங்கு வாழும் வறிய மக்களுக்காக குறித்த காணிகளை மீண்டும் பகிர்ந்தளிப்பதை 

தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். குறித்த விடயம் தொடர்பில் பதிலளித்த அமைச்சர் நீதிமன்ற விடயங்களை ஆராய்ந்து 

அப் பகுதி மக்களுக்கே காணிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாகப் பதில் வழங்கினார்.