யாழ்.மாவட்டத்தில் 12 வயதான சிறுமி மற்றும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 3 பேர் உட்பட வடக்கில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 12 வயதான சிறுமி மற்றும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 3 பேர் உட்பட வடக்கில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் 12 வயதான சிறுமி மற்றும் யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 3 பேர் உட்பட இன்று வடமாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் 262 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களில்எ வருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலையில் 444 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. 

இதன்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்படி யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 12 வயதான சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேலும் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இ.போ.ச பணியாளர் ஒருவருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் தனிமைப்படுத்தலில் இருந்த மல்லாவி மீன் சந்தையுடன் தொடர்புடைய இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 

கிளிநொச்சி வைத்தியசாலையில் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், வவுனியா ஆடை தொழிற்சாலை பெண் பணியாளர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 395 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முல்லோியாவுக்கு அனுப்பட்ட நிலையில், 

3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 3 பேரும் யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்களாகவர். மேலும் அவர்கள் கிளிநொச்சி, புத்தளம், மாத்தறை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு