அண்மைக்காலமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பி எதிர்கட்சிகள் விமர்சிப்பதை ஏற்கமுடியாது
அண்மைக்காலமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பி எதிர்கட்சிகள் விமர்சிப்பதை ஏற்கமுடியாது என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன பரிபாலன இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
அண்மைக்காலமாக எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் எம்மையும் அரசாங்கத்தையும் உண்மைக்கு புறம்பான முறையில் ஊடகங்களில் விமர்ச்சிக்கின்றனர்.இவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன்.எமது அரசாங்கமானது கடந்த கால அரசாங்கம் போல் செயற்படாது மக்களின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது.இதனை சகிக்க முடியாமல் பல்வேறு விமர்சனங்களை இவர்கள் முன்வைக்கின்றனர்.காடழிப்பு விடயத்தில் அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுவதாக கூறுகின்றனர்.ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை.சமூக ஊடகங்களில் பலரும் தெரிவிக்கின்ற கருத்துக்களை ஆராய்ந்த போது தான் அவர்கள் எம்மீது அவதூறு செய்கின்றனர் என புரிகின்றது.
எனவே எம்மை விமர்சிப்பதன் ஊடாக எமது அரசாங்கத்தினையோ அல்லது எனது அமைச்சின் செயற்பாட்டினையோ தடுக்க முடியாது.ஊடகங்கள் மக்களுக்கு பொறுப்பு சொல்லும் விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டார்.