கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டமைக்கு நீதிகேட்டால் அடிப்பார்களா? கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டமைக்கு நீதிகேட்டால் அடிப்பார்களா? கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்..

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10ம் திகதி குடும்பஸ்த்தர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரியும், கொல்லப்பட்டவரின் மனைவி மற்றும் சகோதரி மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 9 மணிக்கு வட்டக்கச்சி சந்தியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உழவு இயந்திரங்களில் மு்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது. கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லையென்றும், 

பொலீஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவு இயந்திரத்தில் வருகை தந்த ஆர்ப்பாட்ட குழுவினர், கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து மாவட்ட செயலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர். 

தமது பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மது விற்பனை, மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துமாறு தெரிவித்தும், உயிரிழந்தவருக்கு நீதி வேண்டியும் குாசங்கள் எழுப்பப்பட்டது.தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகனுடன் 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்துரையாடியதுடன், பொலிஸ்மா அதிபர், பிரிதி பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டோருக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர். இதன்போது தர்மபுரம் பொலிசார் மீது மக்கள் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு