அம்பிகை செல்வகுமாரின் பின்னால் நின்ற இன துரோகிகளே வெற்றிபெற்றனர்..! அம்பிகையின் கோரிக்கைகள் தோற்றுபோய்விட்டன, கஜேந்திரகுமார் காட்டம்..

ஆசிரியர் - Editor I
அம்பிகை செல்வகுமாரின் பின்னால் நின்ற இன துரோகிகளே வெற்றிபெற்றனர்..! அம்பிகையின் கோரிக்கைகள் தோற்றுபோய்விட்டன, கஜேந்திரகுமார் காட்டம்..

தமிழ் மக்களுக்காக 17 நாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்த திருமதி அம்பிகை செல்வகுமார் போராட்டத்தை நிறைவு செய்தமைக்கான காரணம், போராட்டத்தின் இறுதியில் கூறியிருந்த விடயங்கள் ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பாக இன்று அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமதி அம்பிகை அம்மையார் போராட்டத்தை ஆரம்பிக்கும்போது 4 கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். 

முதலாவது கோரிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லவேண்டும். இரண்டாவது கோரிக்கை சர்வதேச சுயாதீன பொறிமுறை சாட்சியங்களை சேகரிப்பதற்காகவும் எதிர்காலத்தில் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வதற்குமான குற்றத்திரிகை தயாரிப்பதற்குமான பொறிமுறை, 3வது கொரிக்கை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக

விசேட துாதுவர் ஒருவர் இலங்கை தொடர்பான விடயங்களை கையாள நியமிக்கப்படவேண்டும். நான்காவது கோரிக்கை சர்வஜன வாக்கெடுப்பு. இந்த 4 கோரிக்கைகள் போராட்டத்தின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையில் நாங்களும் அதனை ஏற்றுக்கொண்டதுடன் ஆதரித்தோம். இது ஒருபுறமிருக்க கடந்த ஜனவரி 15ம் திகதி 3 தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூகம் இணைந்து 

இலங்கை தொடர்பான விடயங்களை கையாளும் கோகுறுாப் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியிருந்தோம். அதில் பிரதானமாக பொறுப்புகூறல் மனித உரிமை பேரவைக்குள்ளிருந்து எடுக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கோ அல்லது ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணைக்கோ கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதாகும். 

மிக தெளிவாக ஒரு கால வரையறையை நியமித்து இந்த சாட்சிகளை சேகரிப்பதற்காக ஐ.நா பொதுச்சபை ஊடுாக சர்வதேச சுயாதீன குற்றவியல் பொறிமுறை உருவாக்கப்படவேண்டும். இங்கே நாங்கள் பொதுச்சபை என்பதை எதற்காக சொன்னோம் என்றால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் ஐ.நா தீர்மானம் தொடர்பாகவும் அதன் பின்னால் உள்ள வல்லரசுகளின் நோக்கங்கள்

தொடர்பாகவும் தெளிவாக குற்றஞ்சாட்டி வந்திருக்கிறோம். குறிப்பாக பலமற்ற பேரவைக்குள் தமிழர்களுக்கான பொறுப்புகூறல் என்ற விடயத்தை முடக்கியிருப்பது வெறுமனே இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை இலக்காக கொண்டதே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கொடுப்பதற்காக அல்ல. என்பதை நாங்கள் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருந்தோம். 

அதனடிப்படையில் பொறுப்புகூறல் என்ற விடயத்தை பேரவைக்குள்ளிருந்து எடுத்து சர்வதேச நீதிமன்றுக்கு அல்லது பொதுச்சபை ஊடாக விசாரணைக்குள் கொண்டுவரப்படவேண்டும் என கூறினோம். இதனை 3 கட்சிகள் கூட்டத்திலும் சுட்டிக்காட்டிய நிலையில் 10 வருடங்களாக மக்களை ஏமாற்றிய தமிழ்தேசிய கூட்டமைப்பு குறிப்பாக சுமந்திரன் 3 தடவைகளுக்கு மேல் அதனை ஏற்றுக்கொண்டார். 

இதனடிப்படையலேயே பொறுப்புகூறல் விடயத்தை பேரவையிலிருந்து எடுத்து பொதுச்சபைக்குடாக அணுகப்படவேண்டும் என்ற இணக்கப்பாட்டுடன் 1வது கடிதம் எழுதப்பட்டது. இது இவ்வாறிருக்க திருமதி அம்பிகை அம்மையார் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும்போது கூறிய விடயங்கள், போராட்டத்தை முடிப்பதற்காக கூறிய காரணங்கள் பலத்த ஏமாற்றத்தை தருகிறது. 

எமக்கு பலத்த சந்தேகம் எழுகிறது. அம்பிகை அம்மையார் நேர்மையானவராக இருந்தாலும். அவருடைய உணர்வுகளை பயன்படுத்தி அவரை கையாண்டவர்கள் அல்லது அவரை சுற்றியிருந்தவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் துரோகத்தை செய்துவிட்டார்கள். அம்பிகை அம்மையார் இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும்போது 0 வரைபில் உள்ள விடயங்கள் ஏமாற்றம் என கூறியே ஆரம்பித்தார். 

ஆனால் நிறைவு செய்யும்போது தன்னுடைய 4 கோரிக்கைகளில் 1வது கோரிக்கை IIIM என்ற விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறி அதனை வரவேற்று பெரு வெற்றி என கூறியதோடு நின்றுவிடாமல் 2வது கோரிக்கையின் அரைவாகி வெற்றியடைந்துவிட்டதாக கூறியிருப்பது எமக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் அம்மையாருடைய அந்த கருத்து மிக மிக பிழையானதாகும். சிரியா விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள IIIM என்ற விடயம் பொதுச்சபை ஊடாக எடுக்கப்பட்ட பலமானதாகும். ஆனால் அதுவே இலங்கை விடயத்தில் பொறுப்புகூறல் என்ற விடயத்தை பொதுச்சபைக்குள் முடக்கும் வரைபையே நாங்கள் பார்கிறோம். ஒப்பிறேட்டிவ் பரக்கிராவ் 6 தமிழர்களின் பொறுப்புகூறலை பேரவைக்குள் முடக்கும்

என நாங்கள் கோ குறுாப்பிற்கு கடிதம் எழுதியிருந்தோம். அதற்கிடையில் அவசர அவசரமாக பிரிட்டனில் உள்ள 250 அமைப்புக்கள் IIIM ஊடாக பொறுப்புகூறலை பேரவைக்குள் முடக்குவதற்கு முயற்சித்தார்கள். அதில் இணைந்து கொண்ட பல அமைப்புக்கள் தமிழ் மக்களுக்காக நேர்மையாக உள்ள அமைப்புக்கள். அதனால் அவர்களுடன் பேசி அவர்களே தங்கள் தீர்மானத்தை மீள கையேற்கும் நிலையை உருவாக்கினோம். 

ஆகவே இது மாபெரும் துரோகம். அந்த துரோகத்தையே அம்பிகை அம்மையாரின் போராட்டத்தையும் பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கிறது. அம்பிகை அம்மையாரின் போராட்டத்தை ஆதரித்த அடிப்படையில் நாங்களும் குற்றவாளிகளாகலாம் என்ற அடிப்படையில் இந்த உண்மையை நிச்சயமாக வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பின் அடிப்படையில் வெளிப்படுத்துகிறோம். 

தமிழ் மக்கள் விழப்பாக இருக்கவேண்டும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு