SuperTopAds

முககவசம் அணியவிட்டால் அபராதம்!! -தமிழக அரசு அதிரடி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
முககவசம் அணியவிட்டால் அபராதம்!! -தமிழக அரசு அதிரடி உத்தரவு-

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாண்டவம் ஆட தொடங்கியுள்ள நிலையில் மக்கள் முக்கவசம் அணியாது வெளியில் திரிந்தார் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 66 நாட்களுக்கு பின் நேற்று மீண்டும் 800ற்க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக தலைமைச்செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்:- அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். 

கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் 1.2 வீதம் உயர்ந்துள்ளது. பிரசாரங்கள் மற்றும் கலாச்சார கூட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.