வீதியின் குறுக்கே ஓடிய நாய்..! கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகிய பேருந்து..
மன்னாரில் இருந்து மடுவுக்கு ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் பெண்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மடுரோட் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நாய் ஒன்று குறுக்கிட
சாரதி பேருந்தை வீதியின் அருகே செலுத்த முயற்சித்த போது பள்ளத்திற்குள் சென்று குடைசாய்ந்துள்ளது.
குறித்த விபத்தில் அதிஸ்டவசமாக எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.