SuperTopAds

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளேனேன்!! -சல்மான் கானின் முன்னாள் காதலி தெரிவிப்பு-

ஆசிரியர் - Editor II
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளேனேன்!! -சல்மான் கானின் முன்னாள் காதலி தெரிவிப்பு-

தானும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளேன் என்று சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் இந்தியில் அதிக படங்களில் நடித்தார். பின் சினிமாவில் இருந்து விலகி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அங்கு புதிய தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து பாலியல் தொல்லைக்கு உள்ளானவர்களுக்கு உதவி செய்து வருகிறார். 

இந்த நிலையில் அவர் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:- சிறுவயதில் தனக்கு பாலியல் தொல்லை எற்பட்டுள்ளது. குறிப்பாக “நான் 6 மற்றும் 9 வயதில் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். 

14 வயதாகும்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். பாலியல் தொல்லை குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் இந்த விடயத்தை யாரிடமும் சொல்லாதே என்றனர். 

அந்த மன வலியோடு பல ஆண்டுகள் வாழ்ந்தேன். பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்த பெண்கள் தயங்கக்கூடாது என்றார்.