கிளிநொச்சி மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் அடுத்தடுத்து சுற்றிவளைப்பு..! 17 பேர் கைது, 17 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது..
கிளிநொச்சி பொலிஸ் எல்லைக்குள் 24 மணிநேர அதிரடி சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊரியான், முரசுமோட்டை, உமையாள்புரம் உருத்திரபுரம், திருவையாறு பகுதிகளில்
சட்டவிரோதமணல் அகழ்வினை தடுக்கும் நோக்கில் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் மூலம் 17 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
8 ஊழவு இயந்திரங்களும், 9 டிப்பர்களும் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர்
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழங்கு தொடரப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.