காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதற்கும் எனக்கும் என்ன தொடர்பு..? மாவட்ட செயலர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதற்கும் எனக்கும் என்ன தொடர்பு..? மாவட்ட செயலர் விளக்கம்..

யாழ்.மாவட்டத்திலிருந்து காணி ஆவணங்களை அனுராதபுரத்திற்கு கொண்டு சென்றமைக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை. அது என்னுடைய முடிவும் அல்ல. என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்திலிருந்து காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 2008-ம் ஆண்டுக்கு முன்னர் வடமாகணத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் அனுராதபுரத்தில் இருந்தே நடவடிக்கைகள் இடம்பெற்றன.

பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அதற்கான ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டு அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 

குறித்த காணி சீர்திருத்த அலுவலகம் யாழ்.மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகம் அல்ல. அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மேற்பார்வையில் இடம்பெற்று வந்தது.

மேலும் யாழ்.மாவட்ட காணி ஆவணங்கள் அனுராதபுரத்தில் எடுத்துச் செல்லப்படவில்லை. ஆகவே ஆவணங்களை அனுராதபுரத்துக்கு கொண்டு செல்வதா? இல்லையா ? என்ற முடிவைக் கூட அவர்களேதான் எடுத்திருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு