SuperTopAds

சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் 17ம் திகதி யாழ்.நல்லுாரில் மக்கள் எழுச்சி போராட்டம்..! ஒன்றுகூடுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு..

ஆசிரியர் - Editor I
சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் 17ம் திகதி யாழ்.நல்லுாரில் மக்கள் எழுச்சி போராட்டம்..! ஒன்றுகூடுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு..

சர்வதேச நீதியைகோரி பொதுமக்கள், சமூக அமைப்புக்கள், அரசியல் கட்சிகளை எதிர்வரும் 17ம் திகதி புதன் கிழமை நல்லுார் முத்திரைச் சந்தியிலிருந்து எழுச்சி போராட்டத்திற்கு ஒன்றுகூடுமாறு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் அழைத்துள்ளனர். 

நல்லுாரில் 15 நாளாக இன்றும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே மாணவர்கள் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், 

இறுதிப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதி வேண்டி வடகிழக்கு எங்கும் சுழற்சி முறையிலான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இஇறுதிப் போரில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளுக்கு 

சர்வதேசத்தின் மூலமே தீர்வினைப் பெற முடியும் என தமிழர்கள் எதிர்பார்க்கின்ற நிலையில் அதற்கான அழுத்தங்களை ஐ.நா சபையில் கொடுப்பதற்கு  உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும். அந்த கோரிக்கையோடு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக 

எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை நல்லூர் முத்திரைச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் மக்கள் எழுச்சிப் பேரணி உண்ணாவிரதப் பந்தலை வந்தடைவதோடு தூதரகங்களுக்கு அனுப்புவதற்கான கடிதங்களும் கையளிக்கப்படவுள்ளது.

ஆகவே காலத்தின் தேவை கருதி குறித்த போராட்டம் வெற்றி அளிப்பதற்கு பாடசாலை மாணவர்கள் சிவில் அமைப்புகள் அரசியல்வாதிகள் சமயத் தலைவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பலர் பங்கெடுத்து குறித்த போராட்டத்தை 

வெற்றியடைய வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.