SuperTopAds

நாவிதன்வெளி பகுதியில் 30 ஆயிரம் மீன் குஞ்சுகள் குளங்களில் விடும் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
நாவிதன்வெளி பகுதியில் 30 ஆயிரம் மீன் குஞ்சுகள் குளங்களில் விடும் நிகழ்வு

அம்பாறை நாவிதன்வெளி  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்னமலை -2  கிராமத்தில் கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவு ஊடாக அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்காக  மீன் குஞ்சுகள் குளங்களில் விடும் நிகழ்வு  இன்று இடம்பெற்றன.

இவ் மீன் குஞ்சுகள் விடும்  நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில்    நடைபெற்றது.இவ் வேலைத்திட்டமானது மீன்பிடி தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின் முயற்சின் ஊடாக திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 பிரதேச செயலாளரினால்  அன்னமலை குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டதுடன்    பிரதேச நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.ரதனின்  கண்காணிப்பின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இவ் திட்டத்தின் கீழ் சுமார் 30,000 மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளதுடன் இம்மீன்குஞ்சு வகைகளில் விரால் மற்றும் கணையான் என்பன உள்ளடங்குகின்றன.

இதனைத் தொடர்ந்து  அப்பகுதியில் உள்ள  அலைமகள் மீனவர் சங்கத்தினருக்கான ரூபா 10 இலட்சம் பெறுமதியுடைய கட்டடம் அமைப்பது தொடர்பிலும் அப்பகுதி மீனவர்களிடம் கலந்துரையாடல் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம சேவக உத்தியோகத்தர் ரி.கேந்துஜன் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரேணுகா    என பலரும் கலந்து கொண்டனர்