இந்தியாவிடமிருந்து 160 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்கிறது அரசாங்கம்..! 10 பெட்டிகள் வந்து சேர்ந்தன..

ஆசிரியர் - Editor I
இந்தியாவிடமிருந்து 160 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்கிறது அரசாங்கம்..! 10 பெட்டிகள் வந்து சேர்ந்தன..

தமிழகம் - சென்னை (ICF) Integral Coach Factory தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 160 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது. 

இதில் முதல் கட்டமாக 10 பெட்டிகள் இன்று (09) மதியம்கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கப்பலில் இருந்து இறக்கப்படுகின்றன. 

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படவுள்ள 160 பெட்டிகளில், ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ .80 மில்லியன் செலவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. 

இந்த பெட்டிகள் முன்னர் 2019 இல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட (M11- locomotive ) இன்ஜின்களுக்கு இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, 

 இவை Air brake system கொண்ட ரயில் பெட்டிகளாகும் இதில் சரக்குப் பெட்டிகள், 41 மூன்றாம் வகுப்பு பெட்டிகளும் , 35 குளிரூட்படப்பட்ட பெட்டிகள் 

மற்றும் 13 உணவக வகை பெட்டிகளும் அடங்குகின்றன.