இந்தியாவின் இரு இடங்களில் திடீர் நிலநடுக்கம்!! -சேதவிபரம் இதுவரை வெளியாகவில்லை-

ஆசிரியர் - Editor II
இந்தியாவின் இரு இடங்களில் திடீர் நிலநடுக்கம்!! -சேதவிபரம் இதுவரை வெளியாகவில்லை-

ஜம்மு காஸ்மீரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, 4.40 மணியளவில் 2.9 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் லடாக்கிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.57 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு