ஜனாசாக்களை எரிக்கின்ற விடயத்திற்கு நிரந்திர தீர்வு கிடைக்கப்பெற்றாலும் தமிழ் முஸ்லீம் ஒற்றுமை ஓங்க வேண்டும்
முஸ்லீம்களின் அடிப்படை மதக்கடமையாக இருக்கக்கூடிய ஜனாசாக்களை எரிக்கின்ற விடயத்திற்கும் நீதி வேண்டி போராடி இருந்தோம்.தற்போது அதற்கான தற்காலிக தீர்வு கிடைத்திருக்கின்றது.அதிலும் கூட சில சிக்கல்களை வைத்து தான் வழங்கிஉள்ளனர்.இதற்கு நிரந்திர தீர்வு கிடைக்கப்பெற்றாலும் தமிழ் முஸ்லீம் ஒற்றுமை ஓங்க வேண்டும்.முஸ்லீம்கள் எமது நீதியான போராட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கல்முனை இளைஞர் சேனையின் முன்னாள் தலைவருமான தாமோதரம் பிரதீபன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று மாலை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
எமது போராட்டமானது ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் மக்களுக்கானதாகும்.இந்த போராட்டத்தில் இனம் மதம் மொழி பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.குறிப்பாக தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பொதுத்தளங்களில் வெளியிட்டு கொண்டிருக்கின்றோம்.எனவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்று முஸ்லீம் மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு பகிரங்கமாக அழைக்கின்றோம்.பி2பி என்ற பேரணியில் ஒட்டுமொத்தமாக தமிழர்களின் பிரச்சினைகளையே முன்வைத்து நடாத்தி இருந்தோம்.முஸ்லீம்களின் அடிப்படை மதக்கடமையாக இருக்கக்கூடிய ஜனாசாக்களை எரிக்கின்ற விடயத்திற்கும் நீதி வேண்டி போராடி இருந்தோம்.தற்போது அதற்கான தற்காலிக தீர்வு கிடைத்திருக்கின்றது.அதிலும் கூட சில சிக்கல்களை வைத்து தான் வழங்கிஉள்ளனர்.இதற்கு நிரந்திர தீர்வு கிடைக்கப்பெற்றாலும் தமிழ் முஸ்லீம் ஒற்றுமை ஓங்க வேண்டும்.
முஸ்லீம்கள் எமது நீதியான போராட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை வழங்க வேண்டும்.ஜனாசா எரிப்பு விடயம் நிறுத்தப்படுவதற்கு பாகிஸ்தான் பிரதமரின் வருகையுடன் முற்றுப்பெற்றதான ஒரு கருத்து கூறப்பட்ட போதிலும் கூட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எமது பேரணியும் வலுச்சேர்த்துள்ளது என்பதே உண்மையான காரணமாகும். அவர் வருகை தந்ததும் ஒரு இராஜதந்திர நடவடிக்கையாக இருக்கலாம்.அரசியல் பின்னணிகள் இருக்கலாம்.மக்களின் பேரெழுச்சியும் இதற்கு ஒட்டுமொத்த காரணமாகும்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் இணைந்து நான் பயணித்துக்கொண்டு இருக்கின்றேன்.இப்போராட்டமானது அனைத்து மட்டங்களிலும் பொதுவாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.